Saturday, October 3, 2015

thumbnail

உத்திரமேரூர் அருகே ரத்த கறையுடன் சென்னை கார்: கொலை செய்த அடையாளமா?

Posted by Uhiramerur News.Com Admin  | No comments

காஞ்சீபுரம், அக் 1–
உத்திரமேரூர் அருகே மல்லியங்கரணை சாலையோர பள்ளத்தில் இன்று காலை கண்ணாடி உடைந்த நிலையில் கார் (எண். டி.என்.11யூ2848) நின்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
காரின் கதவு கண்ணாடிகள் உடைந்து இருந்தன. டிரைவர் இருக்கையின் அருகே ரத்தக்கறை படிந்து இருந்தது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.
எனவே மர்ம நபர்கள் காரில் வந்தவர்களை அடித்து கொன்று வேறு காரில் உடலை எடுத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கார் இருக்கையில் சூட்கேசும், சில ஆவணங்களும் கிடந்தன. அவற்றை கைப்பற்றினர். காரில் வந்தவர்கள் யார்? என்று தெரியவில்லை. சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
Read More»

0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

© 2013 *Uthiramerur*. WP Theme-junkie converted by Bloggertheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top